தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு 3 எம்.பிக்கள் கிடைத்துள்ளனர் என்றும் மூவரும் இணைந்து தொகுதிக்காக பாடு படுவோம் என்றும் அந்த தொகுதியின், மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், டாக்டர் செந்தில்குமார். இவரை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்டவர் அன்புமணி ராமதாஸ். இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரும் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டூ ரைச் சேர்ந்தவர்.
இதுபற்றி, ’தர்மபுரி தொகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள டாக்டர் செந்தில்குமார் எம்.பி, ‘’ தொகுதியில் வேலைவாய்ப்பின்மையை ஒழிக்கவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்கவும் நாங்கள் மூவரும் இணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் வேறுபாடுகளை மறந்து அவர் இவ்வாறு கூறியிருப்பதற்கு தொகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.