ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர் குடும்பம் - தருமபுரியில் நெகிழ்ச்சி!

ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர் குடும்பம் - தருமபுரியில் நெகிழ்ச்சி!
ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர் குடும்பம் - தருமபுரியில் நெகிழ்ச்சி!
Published on

தருமபுரியில் தன்னார்வலர் குடும்பத்தினர் ஆதரவற்றவர்களை மீட்டு மருத்துவமனை மற்றும் காப்பகங்களில் சேர்த்து வருகின்றனர்.

தருமபுரியைச் சேர்ந்த பாலசந்திரன் என்பவர் தருமபுரி நகராட்சியில் உள்ள ரோட்டரி தகன மேடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர், கொரோனா காலத்தில் இறந்தவர்களின் 1200 உடல்களை அடக்கம் செய்துள்ளார். இதனை பாராட்டி மாவட்ட நிர்வாகம் இவருக்கு சான்றிதழ்கள் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இவர், தனியாக மீட்புக் குழு என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவக்கி அதன் மூலம் சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களை குளிக்கவைத்து தனது காரில் அழைத்துச்சென்று மருத்துவமனையில் சிகிச்சையளிக்கிறார். பின்னர் அவர்களை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் சேர்த்துவிடுகிறார்.

இந்த மீட்புப்பணியில் அவரது மனைவி ஜெர்சி மற்றும் ஈவான்ஸ் ராபர்ட், ஸ்பெஷல் எஸ்லி என்கிற 2 மகன்கள் ஆகியோர் உதவிசெய்து வருகின்றனர். இந்நிலையில் ஒகேனக்கல் பகுதியில் உறவினர்களால் கைவிடப்பட்ட பொன்னி என்கிற மூதாட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உணவு, தண்ணீரியின்றி தவித்து வந்துள்ளார். இதையடுத்து அங்குவந்த சுற்றுலாப்பயணி ஒருவர் பாலசந்திரனுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் காரில் வந்த பாலசந்திரன், முகம் சுழிக்கமால் மூதாட்டியை மீட்டு குளிக்கவைத்து அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்ததோடு மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளனர். பாலசந்திரன் தனது குடும்பத்துடன் செய்துவரும் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com