மக்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த யானை.. தாழ்வான மின்கம்பி உரசியதால் நிகழ்ந்த சோகம்!

மக்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த யானை.. தாழ்வான மின்கம்பி உரசியதால் நிகழ்ந்த சோகம்!
மக்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த யானை.. தாழ்வான மின்கம்பி உரசியதால் நிகழ்ந்த சோகம்!
Published on

கம்பைநல்லூர் அருகே உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானை மீது மின்கம்பி உரசியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்னா யானை மற்றும் ஆண் யானை இரண்டும் சுற்றித் திரிந்தது. இவை விவசாய பயிர்களை சேதப்படுத்திய நிலையில், மக்னா யானையை, சின்னத்தம்பி கும்கி யானை உதவியுடன் பிடித்த வனத்துறையினர் முதுமலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், ஆண் யானை மட்டும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானையை, பாலக்கோடு வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து தருமபுரி வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு வந்த காட்டு யானை இன்று காலை கெலவள்ளி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு வழியாக சென்றுள்ளது. அப்பொழுது விவசாய நிலத்தில் இருந்து ஏரிக்கரையின் மீது ஏறும்போது தாழ்வாக இருந்த மின் கம்பியில், யானை உரசியுள்ளது. இதில், தலை, காது பகுதிகளில் மின்சாரம் தாக்கி ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனையடுத்து பின் தொடர்ந்து வந்த பாலக்கோடு மற்றும் மொரப்பூர் வனத் துறையினர் யானை உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உயிரிழந்த யானையை பார்த்துச் செல்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரண்டஹள்ளி அருகே மூன்று யானைகள் உயிரிழந்தன. தொடர்ந்து இன்று மீண்டும் 25 வயது ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

யானை மக்கள் கண்முன்னி மின்கம்பியில் உரசிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ யானை இறக்கும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com