பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது - காவல் துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை

பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது - காவல் துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை
பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது - காவல் துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை
Published on

பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் காவலன் கைப்பேசி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தை நாடெங்கும் எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் தெலங்கானா காவல்துறை துரிதமாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததால், சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு, தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், “ஆபத்து என அழைப்பு வந்தால், காவல்துறையினர் உடனடியாக உதவ வேண்டும். புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்கக்கூடாது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த வேண்டும். ‘காவலன்’ செயலியை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

காவலன் செயலி குறித்து பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். ஆபத்து நேரிடும்போது காவல்துறையின் உதவியை நாட ஊக்குவிக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும். காவல்துறை அதிகாரிகள் 10ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com