தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை அங்கிருந்த மீனவர்கள், பொதுமக்கள் காப்பாற்றினர். ஆனால் சிறுவன் மயக்கநிலையிலே இருந்துள்ளான். அதைக் கண்ட சைலேந்திர பாபு உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சிறுவனின் நெஞ்சை அழுத்தி முதலுதவி செய்தார்.
சிறுது நேரத்தில் மயக்கத்தில் இருந்து சிறுவன் மீண்ட நிலையில், ஆம்புலன்சில் சிறுவனை ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உயிருக்கு போராடிய சிறுவனுக்கு டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி செய்த சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.