தமிழகத்தில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்ற வேண்மென்று அனுப்பிய பரிந்துரையை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பொருட்படுத்தவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர மற்ற 38 தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக தேர்தலில் டிஜிபி டிகே ராஜேந்திரன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் எனவும் அதனால் கடந்த முறை போன்று இந்த முறையும் அவரை மாற்ற வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக உச்சந்நிதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பணியில் இருந்து ரஜேந்திரன் நீக்கப்பட்டு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் செய்யப்பட்டார். அவர் பொறுப்பேற்றதும் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்ற வேண்மென்று அனுப்பிய பரிந்துரையை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பொருட்படுத்தவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில் “உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால் அவரை மாற்றிவிட்டு பொறுப்பை கூடுதல் டிஜிபி கந்தசாமியிடம் வழங்குமாறு அசுதோஷ் சுக்லா தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். சத்திய பிரதா சாஹூவிடம் ஆலோசனை நடத்திய பிறகு இந்த பரிந்துறையை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டிஜிபி அசுதோஷ் சுக்லா செய்துள்ளார். மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி, உளவுத்துறை எஸ்பி உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றவும் சுக்லா பரிந்துரைத்துள்ளார். ஆனால் அதை சத்தியபிரதா சாஹூ கண்டுகொள்ளவில்லை” எனத் தெரிவிக்கின்றன.