கந்தனின் கருணைக்காக அறுபடை வீடுகளில் சூர சம்ஹார நிகழ்வுக்காக காத்திருக்கும் பக்தர்கள்...
சூரசம்ஹாரத்தைக் காண தலையா கடல் அலையா என திருச்செந்தூரில் குவிந்துள்ள மக்கள்... விண்ணை முட்டும் அரோகரா கோஷத்துடன், அசுரனின் வதத்தை காண காத்திருக்கும் பக்தர்கள்
தமிழ்கடவுளான முருகப்பெருமானின் புகழ்பாடும் முக்கியவைபவங்களில் ஒன்று சூரசம்ஹாரம். இது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை சுறுக்கமாக பார்க்கலாம்.
சூரசம்ஹார கதை சுறுக்கமாக...
கஷ்யபமுனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன் தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள் இரண்டாயிரம் கைகள் உண்டு. இதில் சூரபத்மனுக்கு அசுரமுகம், தாரகனுக்கு யானைமுகம், சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் தங்களின் குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கி தவம் பெற்று ப்ரபஞ்சத்தை ஆட்சி செய்யும் வரம் பெற்று தேவர்கள், இந்திரன் போன்றோரை துன்பப்படுத்தி வந்தனர்.
அரக்கர்கள் மூவரின் கொடுமைத்தாங்காது, தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் ஆறுமுகத்தை கொண்ட முருகனை படைத்து அவரின் மூலம் அரக்கர்களை அழித்தார். இந்த நிகழ்வை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹார நிகழ்வானது அனைத்து முருகன் ஆலயங்களிலும் கந்தசஷ்டி விழாவாக வெகுவிமர்சையாக நடைபெறும்.
அந்தவகையில், இந்த ஆண்டு முருகப்பெருமானைக் கொண்டாடும் கந்த சஷ்டி விழாவில் இன்று புகழ்பெற்ற முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது.
இதில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் மக்கள் கிரிவலப்பாதையில் குவிந்து சூரசம்ஹார நிகழ்சியை காண காத்திருந்தனர், தவிர மருதமலை, குன்றத்தூர், போன்ற தலங்களிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைப்பெற்று வருகிறது.