தமிழர்களின் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுதான் தஞ்சாவூர் பெரிய கோவில். இந்த கோவிலுக்கு, தின்சரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த பலகையில், ஆண்கள் வேஷ்டி, சட்டை மற்றும் பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வரலாம். பெண்கள் புடவை, தாவணி துப்பட்டவுடன் கூடிய சுடிதார் போன்றவற்றை அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நைட்டி, ட்ரௌசர் போன்ற உடைகளை பெண்கள் அணிந்து வரக்கூடாது. ஆண்களும் ட்ரௌசர், டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று அறிவிப்பு பலகையில் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்து சமயத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகை கோவிலின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.