டெல்லி விவசாயிகளை சந்திக்கச் சென்ற தமிழக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்

டெல்லி விவசாயிகளை சந்திக்கச் சென்ற தமிழக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்
டெல்லி விவசாயிகளை சந்திக்கச் சென்ற தமிழக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்
Published on

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 71-ஆவது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். டெல்லி - உத்திரப் பிரதேச எல்லையான காசிப்பூரில் போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று சந்திக்கச் சென்றனர். ஆனால், போராடி வரும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விடாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை மீறி எம்.பிக்களால் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை. அதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டு தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். போராடும் விவசாயிகளுடன் துணை நிற்பதாகவும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவுள்ளதாகவும் தமிழக எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com