மக்களவை தேர்தல் 2024 | தேர்தலை புறக்கணித்த மக்கள்... இத்தனை கிராமங்களில் வாக்கு பதிவாகவே இல்லை!

மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் பகுதிகள் யாவை? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மக்களவை தேர்தல் புறக்கணிப்பு
மக்களவை தேர்தல் புறக்கணிப்புபுதிய தலைமுறை
Published on

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.

மக்களவை தேர்தல் 2024 | வாக்கு
மக்களவை தேர்தல் 2024 | வாக்குபுதிய தலைமுறை

மொத்தமாக 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் 10 லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஆண் வாக்காளர்களில் 3 கோடியே 6 லட்சம் பேரும், பெண் வாக்காளர்களில் 3 கோடியே 17 லட்சம் பேரும், மாற்றுப் பாலினத்தவர்களில் 8 ஆயிரத்து 467 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மக்களவை தேர்தல் புறக்கணிப்பு
முதல்நபராக ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அஜித்குமார்!

காலை 7 மணி முதலே எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் தகுந்த ஏற்பாடுகளுடன் வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டு வருகிறது. இந்தவகையில், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, திரைப்பிரபலங்கள் அஜித், ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன், இளையராஜா, வைரமுத்து, குஷ்பூ, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

ஆர்வத்தோடு தங்களின் ஜனநாயக கடமையை மக்கள் ஆற்றிவருகின்றனர் என்று ஒருபுறம் கூறினாலும், மற்றொருபுறம், மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் விதமாக வேங்கைவயல், பரந்தூர் போன்ற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தற்போது வரை ஒருவர் கூட வாக்குகளை செலுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. வேங்கை வயல் கிராமம் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வேங்கைவயல்

வேங்கைவயல் , மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022 ல் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. இதன்காரணமாக, அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளாதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, தற்போது வரை புதுக்கோட்டை வேங்கைவயலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க யாரும் வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் புறக்கணிப்பு
வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள்... சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்!

முன்னதாக, இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து இதற்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும், இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்போம் என்று பேனர்களில் மூலமும் தெரிவிக்கப்பட்டு போராட்டமும் முன்வைக்கப்பட்டது.

சொல்லியபடியே இன்று நடைப்பெற்று கொண்டுள்ள வாக்குப்பதியில் தற்போது வரை ஒருவர் கூட வந்து வாக்களிக்கவில்லை என்று தகவல்வெளியாகியுள்ளது.

பரந்தூர் ஏகனாபுரம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், நாகப்பட்டினம், பரந்தூர் போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 600 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தினை முன்வைத்து வருகின்றனர். 1400 வாக்குகள் உள்ள நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தல் புறக்கணிப்பு
“வாக்களிப்பது நமது கடமை; அனைவரும் வாக்களிக்க வேண்டும்” - ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

முன்னதாக அம்மாவட்ட ஆட்சியரும் கலைச்செல்வி ஏற்கெனவே அப்பகுதி மக்களிடம் 3 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தற்போதுவரை 9 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், குமாரராஜபேட்டையில் உள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அப்பகுதியில் தற்போது வரை ஒரு வாக்குவரை கூட பதிவாகவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

மக்களவை தேர்தல் புறக்கணிப்பு
“கோவை தொகுதி வாக்காளர்களுக்கு பாஜக பணம் கொடுத்ததாக நிரூபித்தால்...” - அண்ணாமலை சவால்

இப்பகுதியில் 6 வழிச்சாலைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், 979 வாக்காளர்களைக் கொண்ட குமாரராஜபேட்டையில் இதுவரையாரும் வாக்களிக்க வரவில்லை. மேலும், பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்சிகளின் முகவர்களும் வாக்குச்சாவடிக்கு வரவில்லை என்று தெரிகிறது.

  • இது மட்டுமல்லது, திண்டுக்கல் மாவட்டம், சின்ன அயன்குள பகுதி மக்கள் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

  • கிருஷ்ணகிரி துளுவப்பெட்டா, குல்லாட்டி கிராம மக்கள் சாலை வசதிகளை ஏற்படுத்தக்கோரி தேர்தல் புறக்கணித்துள்ளனர்.

மக்களவை தேர்தல் புறக்கணிப்பு
🔴LIVE | மக்களவை தேர்தல் 2024 வாக்குப்பதிவு... லைவ் அப்டேட்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com