சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்: என்ன நடந்தது? வெளியான எப்.ஐ.ஆர் அறிக்கை!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல்
மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல்pt
Published on

சென்னை கிண்டியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட விக்னேஷை கைது செய்து 15 நாட்கள் (27/11/24 வரை) புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கிண்டி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல்
”எல்லா உயிரும் சமம் தானே; இரண்டு பக்கமும் பாருங்க”! - கதறி அழுத விக்னேஷின் தாய்!

அதிலுள்ள விவரங்கள், இங்கே:

என்ன நடந்தது? முழு விவரம்!

கிண்டி அரசு மருத்துவமனையின் வாய் மற்றும் முகம் சீரமைப்பு மருத்துவத்துறை பேராசிரியர் சேதுராஜன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் விக்னேஷ் என்ற இளைஞரின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்.ஐ.ஆர் அறிக்கையின் படி, சேதுராஜன் மருத்துவமனையின் முதல் தளத்தில் பணியில் இருந்த போது, தனது அறையின் எதிரே உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவின் துறை தலைவர் மருத்துவர் பாலாஜி ஜெகந்நாதன் பணியில் இருந்த அறையில் இருந்து சத்தம் கேட்டது. அப்போது சேதுராஜனும் அவருடன் பணியில் இருந்த மருத்துவர் சுரேஷ்குமார் (இணை பேராசிரியர், புற்றுநோய் மருத்துவத்துறை), செவிலியர் சக்தி கௌசல்யா மற்றும் செவிலியர் எஸ்தர் ஹில்டா ராணி ஆகியோர் மருத்துவர் பாலாஜி ஜெகந்நாதன் பணியில் இருந்த அறைக்கு சென்று பார்த்த போது, அந்த அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

ஜன்னல் வழியாக பார்த்தபோது விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பின்னர் திடீரென கையால் மருத்துவரை அடித்தும் பின்னர் கத்தியை கொண்டும் தாக்கினார்.

மருத்துவர் பாலாஜி
மருத்துவர் பாலாஜிஎக்ஸ் தளம்

கொலை செய்யும் நோக்கத்துடன் மருத்துவரை வெளியே தப்பிச்செல்ல விடாமல் அவரது அறைக்குள் வைத்து, தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலைப்பகுதி, இடது கழுத்து பகுதி, இடது காது மடல் மற்றும் இடது தோள்பட்டை ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார்.

பின்னர் விக்னேஷை பிடிக்க முயற்சி செய்த போது, விக்னேஷ் எங்களைப் பார்த்து ‘எனது அம்மாவிற்கு சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்பதால் அவரை நான் கத்தியால் வெட்டி கொலை செய்ய வந்தேன். நான் வெட்டியதில் அவர் பிழைக்க மாட்டார்’ என்று கூறியதுடன் ‘யாராவது என்னை பிடிக்க வந்தால் உங்களையும் கத்தியால் குத்தி கொன்று விடுவேன்’ என கொலைமிரட்டல் விடுத்து தப்பி செல்ல முற்பட்டார்.

கடந்த வாரம் விக்னேஷ் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர் பாலாஜி ஜெகந்நாதன் அவர்களிடம் ஆதங்கத்துடன் கோபமாக பேசி விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது” என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்னேஷ்
விக்னேஷ்

7 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு..

  1. கொலை முயற்சி,

  2. சட்டவிரோதமாக தடுத்தல்,

  3. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்குதல் நடத்தல்,

  4. குற்றம் கருதி மிரட்டல், ஆயுதங்களை பயன்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும் வகையில் காயத்தை ஏற்படுத்துதல்,

  5. கடுமையான காயங்களை ஏற்படுத்துதல்,

  6. தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபடும் நபர்கள் மீது வன்முறை

  7. சொத்து சேதத்தினை ஏற்படுத்துதல் தடுக்கும் சட்டம்

ஆகிய ஏழு பிரிவின் கீழ் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல்
’நாட்டுக்காக உயிர்நீத்தது பெருமை..’ - ராஜஸ்தானில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மனைவி உருக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com