”எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம்” - துணை முதலமைச்சர் உதயநிதி

“இது முடிவல்ல. இதுதான் ஆரம்பம். இனி எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம், எங்களுடன் களத்தில் நீங்கள் உள்ளீர்கள்” என தூய்மை பணியாளர்கள் இடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்எக்ஸ் தளம்
Published on

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று நடந்த நிகழ்வில், சென்னை கிழக்கு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகஸே் குமார், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்டம் வழங்கிய துணை முதலமைச்சர்
தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்டம் வழங்கிய துணை முதலமைச்சர்

நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா மேடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

“கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனைத்து ஊடகங்களிலும் மழை குறித்தான பேச்சுகள்தான் இருந்தன. சென்ற ஆண்டு, ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. இதை கருத்தில்கொண்டு இந்தாண்டு முதலமைச்சர் அவர்கள், அனைத்து துறை அமைச்சர்களையும் அழைத்து மழைக்கு முன்பே மழை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ‘மழை பெய்தாலும் மூன்று மணி நேரத்திற்கு எங்கும் தண்ணீர் நிற்க கூடாது’ என அனைவருக்கும் உத்தரவிட்டார். அதை மனதிற்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். எப்போதும் இதுபோன்ற காலத்தில் நாங்கள் களத்தில் இருந்துள்ளோம். நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் நாங்கள் களத்தில் இருக்கிறோம்” என தெரிவித்தார். தொடர்ந்து அவர் குட்டிக் கதையொன்றும் கூறினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகம் - கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

துணை முதலமைச்சர் கூறிய குட்டிக்கதை:

“ஒவ்வொரு நாளும் ஒரு தாய், தன் குழந்தையை குளிக்க வைத்துதான் வீட்டைவிட்டு வெளியே அனுப்புவார். ஆனால் அந்த குழந்தை வீட்டிற்கு திரும்பி வரும்போது சேறும் மண்ணுமாக வரும். அப்போது அந்த குழந்தை மீது அம்மாவிற்கு கோபம் வரும். ஆனால் அது செல்ல கோபம். இதில், அந்த குழந்தை சென்னை. அம்மா என்பது நீங்கள்... அதாவது தூய்மை பணியாளர்கள்கள், செவிலியர்கள்” என கூறினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர்,

மழை பெய்த 12 மணி நேரத்தில் அதன் சுவடே தெரியாத அளவிற்கு பணியாற்றி உள்ளீர்கள். எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னை மக்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்டம்
தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்டம்

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் ஆகிய உங்களுக்கு மீண்டும் நன்கு பணி செய்ய வேண்டும் என்பதை நினைவு கூறும் வகையில் நிவாரண பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. அதில் புடவை, கைலி, ரெயின்கோட், 5 கிலோ அரிசி, எண்ணெய், பால் பவுடர், மிளகாய் தூள் மற்றும் எதிர்பார்க்காத பரிசு தொகை (2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை) இருக்கும்.

இது முடிவுல்ல, இதுதான் ஆரம்பம். இனி எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம், எங்களுடன் களத்தில் நீங்கள் உள்ளீர்கள்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com