திமுக மீதான தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் விமர்சனத்திற்கு, தான் பதிலளிக்க விரும்பவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை புதுப்பேட்டையில், திமுகவின் பவள விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் அவரிடம், திமுக மீதான தவெக தலைவர் விஜய்யின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், ”ஏற்கனவே அதற்கு ஆர்.எஸ்.பாரதி பதிலளித்து விட்டார். எனவே, நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.