"திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது" - உதயநிதி பேச்சு

திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழையும் தமிழனையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி
துணை முதல்வர் உதயநிதிpt desk
Published on

செய்தியாளர்: ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்...

துணை முதல்வர் உதயநிதி
துணை முதல்வர் உதயநிதிpt desk

”இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நிறைய தொடர்பு உண்டு. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இங்கு வந்துள்ளேன். இளைஞர் நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்று முதன் முதலாக வந்தது திண்டுக்கல் மாவட்டம் தான்.

நான் துணை முதல்வராக பொறுப்பேற்று நடத்தி வைக்கும் முதல் திருமணம் இது.. திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது உங்களை சந்தித்தேன். மிகப்பெரிய வெற்றியை திண்டுக்கல் தொகுதியில் கொடுத்துள்ளீர்கள். 40க்கு 40 என நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தந்தனர். வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் உதயநிதி
சுவாமிமலையில் பக்தர்கள் மீது தண்ணீர் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பதில்

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை இருந்தது. அண்ணா, பெரியார், கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் குரல் கொடுத்தனர். நானும் சொன்னேன். நான் சொல்லாததை பொய்யாக திருத்தி இந்தியாவில் பல நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் சொன்னா சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன். அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்தித்து கொண்டு இருக்கின்றேன். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம் திராவிட மாடல் அரசு உள்ளது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்.

துணை முதல்வர் உதயநிதி
துணை முதல்வர் உதயநிதி
துணை முதல்வர் உதயநிதி
“ஆளுநர் கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதில் இருந்து முதல்வர் பின்வாங்க மாட்டார்” - அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் பல பேர் இந்தியை திணிக்க பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக அது முடியவில்லை. அதனால் தமிழ் தாய் வாழ்த்தில் சில வார்த்தைகளை நீக்குகின்றனர். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். முதல்வர் செய்த செயலால் அனைவரும் மண்ணைக் கவ்வி கொண்டுள்ளனர். அண்ணா சூட்டிய தமிழ்நாடு பெயரை மாற்ற நினைத்தார் ஒருவர். தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடைசியில் மன்னிப்புக் கேட்டார். தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர். திமுக கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழையும் தமிழனையும் திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது” என்று துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com