வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பெருமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்தது, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
எதிர்பார்த்த அளவிற்கு சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்ய வில்லை எனினும் காலை 10 மணிக்கு மேல் மெல்ல மெல்ல மழை பெய்ய துவங்கி கனமழையாக பரவலாக பெய்து வருகிறது குறிப்பாக சென்னை மதுரவாயல், போரூர்,வளசரவாக்கம், ராமாபுரம்,முகப்பேர்,பாடி,கொரட்டூர் ,அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தற்போது கன மழை.
புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, திருவேற்காடு, ஆவடி,செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம்,வானகரம்,திருநின்றவூர், பட்டாபிராமில் கன மழை..
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த வட கிழக்கு பருவ மழையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவது பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.