தமிழக அரசின் தோட்டக்கலை துறையும் , இந்திய அஞ்சல் துறையும் இணைந்து வீட்டுக்கே காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் புதிய தலைமுறைக்கு இத்தகவலை தெரிவித்துள்ளனர். மேலும், “சோதனை அடிப்படையில் சிட்லபாக்கம் பகுதியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 7 கிலோ வரை பார்சல் டெலிவரி செய்யும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக டெலிவரி செய்யப்படும் மொத்த காய்கறியில் 10% கமிசன் அஞ்சல் துறைக்கு வழங்க தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது.
தற்போது காய்கறி தட்டுப்பாடு பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. படிப்படியாக இத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.