வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறப்பு - கால்நடை பராமரிப்புத்துறை தகவல்

வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறப்பு - கால்நடை பராமரிப்புத்துறை தகவல்
வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறப்பு - கால்நடை பராமரிப்புத்துறை தகவல்
Published on

வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இன்று மாலை நிலவரப்படி 10,118 கால்நடைகள் இறந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது. அதில், 318 பசுமாடுகள், 15 எருதுகள், 13 காளைகள், 206 கன்றுகள், 59 செம்மறி ஆடுகள், 333 ஆடுகள், 9,151 கோழிகள் என மொத்தம் 10,118 கால்நடைகள் இறந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. 

இதன் மொத்த மதிப்பு 1 கோடியே 57 லட்சத்து 71 ஆயிரத்து 100 எனவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையில் 835 விவசாயிகளும்  பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com