எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு சசிகலா மற்றும் அமமுக கட்சியை சேர்ந்தோருக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஇஅதிமுகவின் நிறுவனத் தலைவரான எம்ஜிஆரின் 34-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்றைய தினம் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் (அமமுக) மற்றும் சசிகலா ஆகியோர் தனித்தனியாக காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா பரவுதல் அதிகரிப்பதைக் சுட்டிகாட்டி காவல்துறை சார்பில் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனியாக அறிக்கையும், சசிகலா தனியாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், அக்கட்சியின் ராயப்பேட்டை அலுவலகத்தில் எம்ஜிஆரின் படத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்றும்., சசிகலா தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்ஜிஆரின் படத்திற்கு அஞ்சலி செலுத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்ஜிஆரின் நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார்