தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் மேலும் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நாகலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் - ராஜாத்தி தம்பதியின் 6 வயது மகள் யாழினி. இவர் கடந்த 15 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பதால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி யாழினி உயிரிழந்தார்.
இதேபோன்று தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்தார். அத்துடன் டெங்குவால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் பெரியகுளம் அரசு மருத்துமனையல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 35க்கும் மேற்பட்டோரும் உள் நோயாளியாக அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாலும், உயிர் இழப்புகள் ஏற்படுவதாலும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.