இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை 6 வாரங்களில் முடிக்க உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணையின் நிலை குறித்து டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முடக்கப்பட்டுள்ள இரட்டை இலையைப் பெற டிடிவி தினகரனுடன் இணைந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க முயன்றதாக தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஏப்ரல் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதே மாதம் 25 ஆம் தேதி டிடிவி தினகரனை டெல்லி காவல்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்த நிலையில், அவர் ஜூன் 1 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.