தீபாவளி பண்டிகை: வடலூர் வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்

தீபாவளி பண்டிகை: வடலூர் வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்
தீபாவளி பண்டிகை: வடலூர் வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்
Published on

தீபாவளியை முன்னிட்டு வடலூர் சந்தையில் ஆடு, மாடு, என 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானதால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெறும் சனிக்கிழமை வாரச் சந்தையில்; ஆடு, மாடு, கோழி, முயல் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை வாங்க பெங்களூரு, சேலம், ,நாமக்கல், புதுவை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி விவசாயிகளும் வியாபாரிகளும் பெருமளவில் குவிந்துள்ளனர். இதனால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் 4000 முதல் 10 ஆயிரம் வரை எடைக்கு தகுந்தார் போல் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது நாட்டுரக மாடுகள் விற்பனை அமோகமாக உள்ளது. விலை அதிகரித்து விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். அதேபோல், முயல் ஒரு ஜோடி 400 முதல் 1300 வரையிலும், புறா 500 முதல் 1000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com