தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் குறித்து புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது....
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து முறையான புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்துகளுக்கு முதல்வர் உத்தரவுப்படி கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம். அதை மீறி அதிக கட்டணம வசூலிக்கும் பேருந்துகளில் பெயர்களை குறிப்பிட்டு புகார் சொன்னால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தம் பணி தற்போது சென்னை எம்டிசி-யில் நடைபெறுகிறது. மொத்தம் 2900 கேமராகள் பொருத்தப்பட உள்ளன. பேருந்துகளில் தவறுகள் நடக்காமல் இருக்க சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.