வேதா நிலையத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கான இழப்பீடு தொகை என ₹67.9 கோடி என்ற விலையை நிர்ணயம் செய்து தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் லக்ஷ்மி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி அந்த தொகையை தமிழக அரசு செலுத்தி வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியுள்ளது.
உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் ஒரு சட்ட போராட்டத்திற்கான துவக்கம் எனவும் வேதா நிலையத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் எனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். மேலும், அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.