தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.
சென்னையிலிருந்து 390 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. 13 கிலோ மீட்டர் வேகத்தில் இது நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேளாங்கண்ணியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.