தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் பதவிக்கான விவாதம்? விரைவில் பதவியேற்கிறாரா உதயநிதி?

முதலமைச்சர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கான ஒப்புதலை தமிழ்நாடு அமைச்சரவை வழங்கியுள்ளது. பயணத்துக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்பது பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்pt web
Published on

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கான ஒப்புதலை தமிழ்நாடு அமைச்சரவை வழங்கியுள்ளது. முதலமைச்சர் பயணத்துக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்பது பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

mk stalin
mk stalinpt web

அண்மைக்காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சிலரும் உதயநிதி துணை முதலமைச்சராவதற்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வந்தனர். சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்கள் இதுபற்றி முதலமைச்சரிடம் கேட்டபோது, "கோரிக்கை வலுக்கிறது. ஆனால், பழுக்கவில்லை" என்று பதில் அளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
’உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா?’ - முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் 44,125 கோடி ரூபாய்க்கான 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்pt web

தூத்துக்குடியில் செம்காப் நிறுவனம் 21,340 கோடி ரூபாய் முதலீட்டில் 1,114 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், காஞ்சிபுரத்தில் மதர்சன் எலட்ரானிக்ஸ் 2,600 கோடி ரூபாய் முதலீட்டில் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல 1,777 கோடி ரூபாய் முதலீட்டில் 2,025 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஈரோட்டில் துவங்க உள்ள மில்கி மிஸ்ட் நிறுவனம் மற்றும் கிருஷ்ணகிரியில் 1,597 கோடி ரூபாய் முதலீட்டில் , 715 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைய உள்ள கிரீன் டெக் நிறுவனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
82 வயது கேரள முதியவர் கொலை வழக்கு: ‘தெகிடி’ பாணியிலான மோசடியில் ஈடுபட்டு சிக்கிய நிறுவன மேலாளர்!

இத்துடன் உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை சார்பில் மூன்று கொள்கைகளுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

அதன்படி, தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் (PSP) Pump Storage Projects - கொள்கை 2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் (SHP) Small Hydropower projects கொள்கை 2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை- 2024 ஆகிய கொள்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு: திடீர் ட்விஸ்ட்.. திருச்சியில் இல்லையா?

2030 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகா வாட் உற்பத்தி நிறுவு திறனை அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.

இந்நிலையில் முதலமைச்சரின் பயணத்துக்கு முன்பாக ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்பார் என்றும், அதுதொடர்பாக அமைச்சர்களிடம் முதலமைச்சர் விவாதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.. நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com