பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு
பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு
Published on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, செயல்பட்டு வந்தது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதற்கு என்று இந்த ஆலை உரிமம் பெற்றுள்ளது. இந்த நிலையில், பகல் ஒரு மணியளவில் பட்டாசு ஆலையில் இருந்து வெடி விபத்து நேரிட்டு பலத்த சத்தம் கேட்டுள்ளது. 

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வேம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். பட்டாசு விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர், சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்த மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com