தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் EPS!

திமுக எம்.பி தயாநிதி மாறன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்.19 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
dayanidhi maran - EPS
dayanidhi maran - EPSpt desk
Published on

மக்களவைத் தேர்தல் 2024 பரப்புரையின்போது, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

EPS
EPSpt desk

பின்னர், இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை இவ்வழக்கானது விசாரணைக்கு வந்தது.

dayanidhi maran - EPS
"அண்ணாமலை ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றாரா?" - செல்லூர் ராஜூ கேள்வி

அப்போது, ஆஜரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அவதூறு வழக்கில் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை நான் மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இவ்வழக்கை செப்.19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com