எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்தார் தயாநிதி மாறன் – காரணம் என்ன?

அவதூறாக குற்றச்சாட்டு தெரிவித்தாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
தயாநிதி மாறன் - EPS
தயாநிதி மாறன் - EPSpt desk
Published on

செய்தியாளர்: ஆர்.முருகேசன்

தன் மீது அவதூறாக குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் வழக்குப் பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்த தயாநிதி மாறன், செய்தியாளர்களை சந்தித்தார்.

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

அப்போது பேசிய அவர்... “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் புறம்பாக, நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்பது பொய்யென தெரிந்தும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் அவர், மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்குப் பதிவு செய்திருக்கிறேன்.

தயாநிதி மாறன் - EPS
மக்களவை தேர்தல் 2024 | நிதின் கட்கரி முதல் எல்.முருகன் வரை... களம் காணும் மத்திய அமைச்சர்கள் லிஸ்ட்!

இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தொகுதி நிதியில் சுமார் ரூ.17 கோடியில் ரூ.17 லட்சம்தான் மீதம் உள்ளது. தொகுதி நிதியை மத்திய சென்னைக்காக செலவு செய்துள்ளேன்.

எடப்பாடி பழனிசாமி தோல்வி விரக்தியில் பேசி வருகிறார். அவர் பேசுவது அவருக்குத் தெரிகிறதா என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் திமுகவினரை தாக்கினோம் என்று பேசி இருக்கிறார். உண்மை என்னவென்று மக்களுக்குத் தெரியும். என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன்.

தயாநிதி மாறன் - EPS
கோவை | பாஜக மீது பணப்பட்டுவாடா புகார்.. ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்! பறக்கும் படை அதிரடி!

இந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில நாளேடு ஆர்.டி.ஐ மூலமாக அந்த செய்தியைப் பெற்றதாகவும் இதற்கு மறுப்பும் தெரிவித்து இருக்கிறது. இதேபோலவே ஆர்டிஐ-யில் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் செய்தார். ஆர்டிஐ முறை பாஜக ஆட்சியில் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com