சென்னையை அடுத்துள்ள நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவைச் சேர்ந்த ஜமீலா என்பவருக்கு சொந்தமான இடத்தில் யுவன் சங்கர் ராஜாவின் யு1 ரெக்கார்ட்ஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில், யுவன்சங்கர்ராஜா தனக்கு ரூ.20 லட்சம் வாடகை பாக்கியை தரவில்லை, முறைப்படி தகவல் அளிக்காமல் அவர் வீட்டை காலி செய்து சென்றதாக என உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் ஜமீலா தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார். ரசிகர்கள், உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வருவதால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் யுவன் சங்கர்ராஜா.
மேலும், வாடகை விவகாரத்தில் வீட்டு உரிமையாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.