தமிழகத்தில் 23000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 167 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 23000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 167 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் 23000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 167 பேர் உயிரிழப்பு
Published on

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 23000ஐ கடந்துள்ளது. 

1,55,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 23,286, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 44 பேர் என ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட 796 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் மேலும் 167 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,779 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 94 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 73 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் ஏற்கெனவே 6,228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 6,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,28,311ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 20,062 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 11,29,512 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com