வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக புயலாக உருமாறியது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 440 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள 'மாண்டஸ்' புயல், மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை காலை வரை தீவிர புயலாகவே இருந்து பிற்பகலில் புயலாக வலுவிழந்து இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயலின் பாதை அடுத்த 24 மணிநேரத்தில் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோ செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.