அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் - ஆஃப் 15% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை நீட் தேர்வுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கு 35% ஆகவும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30% ஆகவும், OBC, SC, ST பிரிவினருக்கு 25% ஆகவும் கட் - ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட கட் - ஆஃப் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்துக்கு, மத்திய பொது சுகாதார சேவை இயக்ககம் உத்தரவிடப்பட்டுள்ளது.