ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியவர்களிடம் இருந்து காவல்துறையினர் சார்பில் 04.07.2020 தேதி வரையிலான நிலவரப்படி 16 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 5 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் பொதுமக்கள் பலர் விதிகளை மீறி சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது, முகக் கவசம் அணியாமால் வெளியே சுற்றுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்படி ஊரடங்கு விதிகளை மீறியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தல், அபராதக் கட்டணம் வசுலித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் 04.07.2020 தேதியின் படி இது வரை ஊரடங்கில் 7,28,693 அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும், 7,98,570 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாகன அத்துமீறலில் 6,09,816 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், 7,28,693 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 16,96,08,005 அபாராதக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.