சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி: முதல்வர்

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி: முதல்வர்
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி: முதல்வர்
Published on

சென்னையில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 70 சதவீதம் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், சேலத்தில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்து பேசிய முதல்வர் “மீண்டும் ஊரடங்கு என்று வாட்ஸ் அப்பில் வருவது தவறான செய்தி. அதை பரப்பியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதே கொரோனாவை தடுப்பதற்கான மருந்து. கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதை மக்கள் தவிர்ப்பது வேதனையளிக்கிறது. பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிகளில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com