வீட்டிலோ, ஹோட்டலிலோ, ஃபாஸ்ட் புட் கடைகளிலோ, அனாயசமாக சாப்பிடும் உணவு, எப்படி சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு ஆகும் செலவுகள் என்ன என்று பார்த்தால், ஒருபோதும், உணவை வீணாக்கிடத் தோன்றாது. நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்ய ஆகும் செலவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
நெல் சாகுபடி
நெல் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25000 செலவு
விதைநெல், நடவு, உரம் உள்ளிட்டவற்றிற்கு 60% தொகை, கூலிக்கு 40% தொகை செலவு
கரும்பு சாகுபடி
கரும்பு ஏக்கர் ஒன்றுக்கு சாகுபடி செய்து அறுவடை செய்ய ரூ.60000 செலவு
கரும்பு கரணை, அடி உரம், மேல் உரம், பூச்சிமருந்துக்கு, மொத்த தொகையில் 60% செலவு
தோகை கழித்தல், கரும்பு வெட்டுதல் கூலி செலவாக மொத்த தொகையில் 40% செலவு
கரும்பு சாகுபடியில் 2ஆம் போகத்திற்கு ரூ.45000 செலவு
வாழை சாகுபடி
வாழை சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80000 லிருந்து, ஒரு லட்ச ரூபாய் வரை செலவு
வாழைக்கன்று நடுதல், வாழைக்கன்று பிரித்தல் உள்ளிட்டவற்றிக்கு ரூ.60000 செலவு
வாழை மரக்கன்று நட, அறுவடை ஆகியவற்றிற்கான கூலிக்காக ரூ.40000 ரூபாய் செலவு
முறையாக விளைச்சல் கிடைத்தால் 25% வரை லாபம்