திமுக எம்.பி. ரமேஷின் முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜு வழக்கை விசாரணைக்கு எடுத்த சிபிசிஐடி, சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தது. சிபிசிஐடி விசாரணையில், முந்திரி ஆலையிலிருந்த பொருட்களை திருடிவிட்டதாக, செப்டம்பர் 19ஆம் தேதி கோவிந்தராஜுவை 5 பேர் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. கோவிந்தராஜுவின் உடலில் காயங்கள் இருந்ததால், அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல, புகார் அளிக்கச் சென்றவர்களிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது, திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் தன்னை தாக்கிவிட்டதாக கோவிந்தராஜு கூறியதாக தெரிகிறது.
அதன்பிறகு தொழிற்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர், வினோத் ஆகியோர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக நடராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.