கடலூர்: மறைந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு 10 வருடங்களாக Flex வைக்கும் தொழிலாளி!

சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய முன்னாள் அதிபர் லீ குவான் யூ-க்கு, கடந்த 10 ஆண்டுகளாக கடலூரில் பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் வைத்து வருகிறாராம் சிங்கப்பூரில் பணியாற்றிய கடலூர் தொழிலாளியொருவர்.
birthday flex
birthday flexpt desk
Published on

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தசமயத்தில், வேலைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். இதுபோல் அந்த பகுதியைச் சேர்ந்த பலரும் பிழைப்பு தேடி சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

flex banner
flex bannerpt desk

சிங்கப்பூர் சென்றபின் இவர்களின் நிலை மேம்பட்டுள்ளது. தற்போது நல்லநிலையில் உள்ளனர். இதுகுறித்து நம்மிடையே பேசிய பாபு, “பொருளாதாரத்தில் பின்தங்கிய நாங்கள் நல்ல நிலையில் இன்று வசதியாக வாழ்ந்து வருகிறோம், சிங்கப்பூரில் எங்கள் உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், ஊதியமும், சுதந்திரமும் கிடைத்தது. அதனால் எங்கள் வாழ்க்கைத் தரம் வேகமாக முன்னேறியது.

எங்களை வாழவைத்த சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்தும், நினைவு நாள் பேனரும் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் வைத்து வருகிறோம்” என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்

birthday flex
ஊழியர் இல்ல திருமணத்தில் பங்கேற்க புதுக்கோட்டைக்கு வந்த சிங்கப்பூர் உரிமையாளர்.. உற்சாக வரவேற்பு!

தமிழ்நாட்டில் கிராமம்தோறும் சினிமா நடிகர்களுக்கு பேனர் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மறைந்த வெளிநாட்டு முன்னாள் அதிபரொருவருக்கு ஒருவர் பேனர் வைத்திருப்பது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com