அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியமான ஆபாசமான பேச்சால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் லேசாக மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில், யாருக்கும் காயமும் சேதமும் ஏற்படாத நிலையில் ஓட்டுநர் பேருந்தை இயக்கினார் அப்போது எதிரே வந்த விருத்தாசலம் கடலூர் செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் என்ன விபத்து என ஓட்டுனரிடம் கேட்டுள்ளார்.
இதற்கு, விபத்து குறித்து தெரிவித்த அவரிடம், கடலூர் மார்க்கமாக செல்லும் பேருந்து ஓட்டுநர், காலையிலேயே வண்டியை எடுத்துட்டு வந்துடுது தருதலைகள் என ஒருமையில் ஆபாசமாக தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் பேருந்தை பின் தொடர்ந்து பாலக்கரை அருகே பேருந்தை மறித்து ஓட்டுநர மன்னிப்பு கேட்டால் தான் பேருந்தை இயக்க விடுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுனரின் தேவையற்ற பேச்சால் அரைமணி நேரம் பயணிகளுடன் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதம் செய்தது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை எரிச்சலடையச் செய்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் பஸ்சை சிறை பிடித்த இளைஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.