பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்

பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்த நிலையில், வெள்ளநீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருவது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது
பக்கிங்காம் கால்வாய்
பக்கிங்காம் கால்வாய்ஃபேஸ்புக்
Published on

பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்த நிலையில், வெள்ளநீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருவது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது

மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொடுங்கையூர் கார்கில் நகரில்  கச்சா எண்ணெய் கலப்பு தொடர்பாக குழு ஆய்வு மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.   ஆய்வுக்குழு எண்ணெய் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவை மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தை சேர்ந்தது என தெரியவந்ததாக மாசு கட்டுப்பாட்டு
வாரியம் விளக்கம் அளித்துள்ளது.  

மேலும் இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கையில், “கனமழை காரணமாக
சென்னை பெட்ரோலிய நிறுவன வளாகத்தில் அதிகளவு மழைநீர்
தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும்போது, ஆலை வளாகத்தில் பூமிக்கு அடியில் சேகரிக்கப்பட்டிருந்த கச்சா
எண்ணெயும் வெளியேறியுள்ளது.

பக்கிங்காம் கால்வாய்
பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை.. "திருப்பதி" மாடல் வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கூட்டம்!

எனவே கச்சா எண்ணெய் கலந்த கழிவுநீரை அகற்ற சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் விரைவில் அகற்றப்படும் என அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும் தண்டையார்பேட்டை பகுதியில்  இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கச்சா எண்ணெயும் கலந்துள்ளது.” என்று விளக்கம் அளித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com