சுபமுகூர்த்த நாளையொட்டி பட்டுப்புடவை எடுக்க காஞ்சிபுரத்தில் குவிந்த கூட்டம்!

சுபமுகூர்த்த நாளையொட்டி பட்டுப்புடவை எடுக்க காஞ்சிபுரத்தில் குவிந்த கூட்டம்!

சுபமுகூர்த்த நாளையொட்டி பட்டுப்புடவை எடுக்க காஞ்சிபுரத்தில் குவிந்த கூட்டம்!
Published on

இன்று சுபமுகூர்த்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று முகூர்த்தநாள் என்பதால், காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்க அண்டை மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் காஞ்சிபுரத்தின் முக்கிய பட்டு ஜவுளிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில், தனிமனித இடைவெளி பின்பற்றாத கடைகளில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி திடீர் ஆய்வு செய்தார். ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட 25க்கும் அதிக இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக தனிமனித இடைவெளி பின்பற்றாவிட்டால்,கடைக்கு சீல் வைக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com