ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அண்ணா சமாதி முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள நான்கு கிலோமீட்டர் இணைப்பு சாலையில் பொதுமக்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், மாநகராட்சி நீச்சல் குளம், கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. அதிகப்படியான மக்கள் வருகையின் காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வாரா வாரம் அதிகரித்து வரும் நிலையில் பட்டினம்பாக்கம் சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பிற்காக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரையில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்களை நனைக்கும் போது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக நீச்சல் பயிற்சி வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: திருப்பத்தூர்: சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் தூங்கியபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு