ஞாயிறு முடக்கத்தால் இறைச்சிக்கடைகளில் இன்றே அலைமோதிய கூட்டம்

ஞாயிறு முடக்கத்தால் இறைச்சிக்கடைகளில் இன்றே அலைமோதிய கூட்டம்
ஞாயிறு முடக்கத்தால் இறைச்சிக்கடைகளில் இன்றே அலைமோதிய கூட்டம்
Published on

ஞாயிறு முடக்கத்தால் இறைச்சிக்கடைகளில் இன்றே கூட்டம் அலைமோதியது. 

தருமபுரி வங்கக்கடலில் மீன்பிடி தடை காலம் இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து கடலூர் - சிதம்பரம் சாலையில் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நாளை முழு ஊரடங்கு என்பதால் மீன் வாங்க அதிகாலை நேரத்திலேயே சிறு வியாபாரிகளும் பொது மக்களும் பெருமளவில் குவிந்தனர். விற்பனை துவங்கிய மூன்று மணிநேரத்திலேயே சுமார் 50 டன் மீன்கள் விற்று தீர்ந்தது. 

சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மீன் சந்தையில் மீன் மற்றும் இறைச்சிகளை வாங்க மக்கள் அலைமோதினர். சந்தைக்கு வருவோர் பாதுகாப்பான முறையில் மீன்களை வாங்கிச்செல்ல கிருமிநாசினி கொடுத்தும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை காசிமேட்டில் மீன் வாங்க கூட்டம் குவிந்ததால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியானது. ஞாயிற்றுக்கிழமை என்றாலே திருவிழா போல காட்சியளிக்கும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், சனிக்கிழமையே மீன்களை வாங்க கூட்டம் கூடியது. கூட்டத்தை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் மீன் வாங்குவதில் ஆர்வம்காட்டி முகக் கவசம் இல்லாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் முண்டியடித்துக்கொண்டு ஏலம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

இதேபோல, மயிலாடுதுறையிலும், மீன், இறைச்சி வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதனால் காலை முதலே கடைகளில் கூட்டம் அதிகரித்திருந்தது.

ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி திருச்சி காந்தி சந்தை இன்று இரவு 10 மணிக்கு மூடப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே அங்கு காய்கறி வாங்க மக்கள் குவிந்தனர்.

தருமபுரியில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மரபுசந்தை, இன்றே திறக்கப்பட்டது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள், இயற்கை உணவுகளை மக்கள் வாங்கிச்சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com