பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை விமர்சித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்போவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதனைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அதன் தலைவர் முகமது ஷேக் அன்சாரி, தங்கள் அமைப்பின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவித்தார். பெருவெள்ளம், புயல் போன்ற காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவிகளை செய்திருப்பதாகவும் அவர் கூறினார். ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிக்கலாம்: “மனிதநேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் பட்டினபிரவேசம் என முதல்வர் உறுதி” - குன்றக்குடி ஆதினம்