கோவை அருகே வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காயை கடித்ததில் மாடு ஒன்று தலை சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வனக்கோட்ட எல்லைக்கு அருகிலுள்ள தோட்டங்களில் வேட்டைக்காக தொடர்ந்து அவுட்டுக்காய் வைக்கப்பட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காயை மேய்ச்சலின் போது மாடு கடித்துள்ளது. இதில் மாடு தலை சிதறி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.