ஒட்டப்பிடாரம்: எல்லையை நோக்கி சீறிப் பாய்ந்து பரிசுகளை தட்டித் தூக்கிய காளைகள்

ஒட்டப்பிடாரம்: எல்லையை நோக்கி சீறிப் பாய்ந்து பரிசுகளை தட்டித் தூக்கிய காளைகள்
ஒட்டப்பிடாரம்: எல்லையை நோக்கி சீறிப் பாய்ந்து பரிசுகளை தட்டித் தூக்கிய காளைகள்
Published on

ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் எல்கையை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தன.

ட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டி போட்டியில் 8 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி போட்டியில் 19 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பத்து மைல் தூரம் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை மேட்டூர் அழகர் பெருமாள் மாட்டு வண்டியும், 2-வது பரிசை திருநெல்வேலி மாவட்டம் வேலன்குளம் கண்ணன் மாட்டு வண்டியும், 3-வது பரிசை கச்சேரி தளவாய்புரம் ஈஸ்வரன் மாட்டு வண்டியும் தட்டிச் சென்றது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 6 மைல் தூரம் சிறிய மாட்டு வண்டி போட்டியில் புதூர் பாண்டியாபுரம் பேச்சியம்மாள் மாட்டுவண்டி முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை மெடிக்கல் விஜயகுமார் சண்முகபுரம் மாட்டு வண்டியும், மூன்றாவது இடத்தை சித்தர் சங்கச்சாமி சிங்கிலிபட்டி பாலஅரிகரன் வண்டியும் பிடித்தன.

இந்த பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com