ஆம்புலன்ஸ் வரவில்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பைக்கில் மருத்துவமனை சென்ற அதிர்ச்சி

ஆம்புலன்ஸ் வரவில்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பைக்கில் மருத்துவமனை சென்ற அதிர்ச்சி
ஆம்புலன்ஸ் வரவில்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பைக்கில் மருத்துவமனை சென்ற அதிர்ச்சி
Published on

(கோப்பு புகைப்படம் )

தகவல் கொடுத்து 12 மணி நேரத்திற்கு பிறகும் ஆம்புலன்ஸ் வராததால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து மருத்துவமனையை அடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி நரசாத் தெருவினை சேர்ந்த 59 வயது முதியவருக்கு கடந்த புதன்கிழமை மதியம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த நபர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து விவரத்தைக் கூறி தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் போன் செய்த சமயம் அங்கு ஆம்புலன்ஸ் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பல முறை 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்களோ ஆம்புலன்ஸ் அனைத்தும் பிற நோயாளிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையே மறுபடி மறுபடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அன்று வீட்டில் நள்ளிரவு வரை ஆம்புலன்ஸூக்காக காத்திருந்த அவர், அதன் பின்னர் வேறு வழியில்லாமல் தனது மகனின் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையை அடைந்துள்ளார்.

(கோப்பு புகைப்படம் )
இது குறித்து அவினாசிப் பகுதி சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறும் போது “ தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் முதலில் பிற்பகல் 1.15 மணிக்கு வருவதாக இருந்தது. அதன் பின்னர் அது 4 மணி, 7 மணி, 9 மணி என நீண்டு கொண்டேச் சென்றது. தகவலறிந்தவுடன் நாங்கள் அவரை வீட்டில் தனிமையிலிருக்க அறிவுறுத்தினோம். அவர் வெளியே வராதாபடி அவரது வீட்டுகதவுகளையும் மூடினோம். நாங்கள் சொன்ன எல்லாவற்றுக்கும் அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். ஆம்புலன்ஸூக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த வாய்ப்பை நாங்கள் அவருக்கு வழங்கினோம்.

(கோப்பு புகைப்படம் )

அவரது 21 வயது மகனும் அவரும் இரு சக்கர வாகனத்தில், கிட்டத்தட்ட18 கிலோ மீட்டர் பயணம் செய்து மருத்துவமனைச் சென்றடைந்தனர். அவரது மகன் தான் வாகனத்தை இயக்கினான். இருவரும் முக கவசம் அணிந்திருந்தனர். அவினாசி காவலர்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னர் அவரது வீட்டை நாங்கள் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு வந்தோம்.” என்றார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுகாதார பணியாளாராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறும் போது “ அவர்கள் சென்ற பாதையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

Courtesy : THE HINDU

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com