கோவாக்சினின் மனித சோதனைகள் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டுவருகின்றன. பல கட்ட சோதனைகளுக்கு பிறகே ஒரு மருந்து நோயாளிகளுக்கு கொடுக்கப்படும். இந்நிலையில், புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத்பயோடெக் மருந்நு நிறுவனம் கோவாக்சின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது.
பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர், மனிதனுக்கு செலுத்தி ஆய்வு செய்யும் சோதனை தொடங்கியுள்ளது. இதற்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் முழு உடல் தகுதியுடன், எந்தவித நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த நபர்களுக்கான பதிவு நேற்று முதல் தொடங்கியது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை நேற்று தொடங்கியது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கோவாக்சினின் மனித சோதனைகள் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைக்கு தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மருத்துவக் கல்லூரி எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்களில் உள்ள தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.