கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி ஒருவரும் குணமடைந்த நிலையில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை ஆனது.
கோவை மாவட்டத்தில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 145 பேரில் 141 பேர் அவ்வப்போது குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 3 ஆம் தேதி கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து கரும்புக்கடை பகுதியை சேர்ந்த 31 வயதான பெண் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணியான இவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று இல்லை என உறுதியானது. இந்நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணும் தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை ஆனது. இந்த தகவவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.