கோவை குட்கா ஆலை விவகாரம் : திமுக நிர்வாகி சென்னையில் கைது

கோவை குட்கா ஆலை விவகாரம் : திமுக நிர்வாகி சென்னையில் கைது
கோவை குட்கா ஆலை விவகாரம் : திமுக நிர்வாகி சென்னையில் கைது
Published on

கோவையில் முறைகேடாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை விவகாரத்தில் திமுக நிர்வாகி முருகேசன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியில் முறைகேடாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை விவகாரத்தில், காவல்துறையினரின் சோதனையின் போது வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக நிர்வாகி முருகேசன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சூலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், ஏழு பேருக்கும் கடந்த 4ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குட்கா ஆலை உரிமையாளர் அமீத் ஜெயினுக்கும், முருகேசனுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர். இதனால் குட்கா ஆலை விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி முருகேசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யபட்ட நிலையில், ஆலை மேலாளர் ரகுராமிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் சூலூர் காவல் ஆய்வாளார் தங்கராஜ் தலைமையிலான காவல்துறையினர் இன்று முருகேசனை சென்னையில் கைது செய்துள்ளனர். அத்துடன் அவரை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கோவை குட்கா ஆலை விவகாரம் தொடர்பாக அதிமுகவும், திமுகவும் பரஸ்பர குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில், முருகேசனை காவந்துறையினர் மீண்டும் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com