திருடிய நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றி விற்க முயற்சி - முக்கிய கொள்ளையன் கைது

திருடிய நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றி விற்க முயற்சி - முக்கிய கொள்ளையன் கைது
திருடிய நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றி விற்க முயற்சி - முக்கிய கொள்ளையன் கைது
Published on

கோவையில் திருடிய தங்க நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றி விற்க முயன்ற போது முக்கிய கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர். 

கோவை செல்வபுரத்தை சேர்ந்த தங்க வியாபாரி அபினவ், கடந்த மாதம் 20ம் தேதி தனது தங்க நகைகளை சேலத்திற்கு விற்பனைக்காக அனுப்பி வைத்தார். அந்த நகைகளை 60 வயது முதியவரும், நகைக்கடையின் ஊழியருமான ரவிச்சந்திரன் சேலத்திற்கு கொண்டு சென்றார். சின்னியம்பாளையம் பேருந்து நிலையத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலால் ரவிச்சந்திரனுக்கு தெரியாமலேயே அவரிடம் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.  

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கொள்ளையடித்த நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றிய கொள்ளைக்கும்பல் அதனை விற்பனை செய்ய முயற்சித்தது. அப்போது கொள்ளை கும்பலின் முக்கிய கொள்ளையனான மலைச்சாமியை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். 

அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் மலைச்சாமியின் கூட்டாளிகளான சீனிவாச பாண்டியன், வீரபாண்டி, பாலமுருகன், மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்தக் கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

ஒடும் பேருந்தில் ரூ.1 காயினை சுண்டிவிட்டு, நூதன முறையில் லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கும் சம்பவத்தை இந்தக் கும்பல் அதிகம் அரங்கேற்றிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com